தேர்தல் அறிக்கை 2026

2026 ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற முழக்கத்துடன் பிரச்சாரம் - வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி நிறுவனத் தலைவர். S.K.செல்வம்

ஒரு நேர்மையான மக்களுக்கான அரசு அமைய ஆட்சியிலும் அதிகாரப் பகிர்வு என்ற முழக்கத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறது ‘வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி வருங்கால மருத்துவர் சமூகத்தை அரசியல் மயமாக்கி, தேர்தல் அரசியலை அனைவருக்குமான இடமாக வென்றெடுக்கும் ஓர் இயக்கமாக வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி விரைவில் வீரநடைப் போடவுள்ளது.

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற முழக்கத்துடன் எளிய மருத்துவர் சமுதாய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியின் விரைவில் தொடங்குவோம்!

சுதந்திர போராட்ட தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ் குடும்ப வாரிசுகளுக்கு அரசு வேலை, வீட்டு மனை மற்றும் மாதந்தோறும் உதவித் தொகை உடனடியாக வழங்க வேண்டும்.

சுதந்திர போராட்ட தியாகி எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ் வாழ்ந்தது 54 ஆண்டுகள் மட்டுமே. இதில் 29 முறை சிறைக்குச் சென்றார் அந்த வீரத் தியாகி. ஒரு நாள் நாடகம். ஆறு மாதம் அல்லது ஓராண்டு சிறை. அப்படியே வாழ்ந்து கொண்டிருந்த விஸ்வநாத தாஸ், தன் குடும்பச் சொத்தும் அழிந்தும், குடும்பம் வறுமைப்பட்டு கடன்காரனாக மாறிக் கொண்டிருப்பது அறிந்திருக்கவில்லை. தேசத்தை தவிர, விடுதலையைத் தவிர வேறு எதையும் நினைக்காத அந்த கலைஞனை, நாடு சுதந்திரம் பெற்றதும் பதவிக்கு வந்தவர்கள் மறந்து போனார்கள். தியாகி எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ் வாரிசுகள் வாழ வழியின்றி தவிக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்டோர் பட்டியல் (மருத்துவர், நாவிதர், மங்களா) சேர்க்க வேண்டும்.

கிராமப்புறங்களில் உள்ள முடிதிருத்தும் நிலையங்களில் இலவச மின்சாரம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும், தமிழக அரசுக்கு சொந்தமான கோவில்களில் பணியாற்றி வரும் முடிதிருத்தும் தொழிலாளர்களையும், தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்களையும் அரசு ஊழியர்களாக வேண்டும், முடிதிருத்தும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி தொகையை 50 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். விபத்தில் கடும் காயமடைந்த தொழிலாளர்களுக்கு முதல் உதவி தொகையாக 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.

முடிதிருத்தும் தொழிலாளர்கள் பிள்ளைகளின் கல்விக் கட்டணங்களை தமிழக அரசே ஏற்க வேண்டும்.

பெரும் முதலாளிகள், கோடிக் கணக்கில் வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தாத போது, அவற்றை வாராக் கடன்கள் தெரிவித்து அவற்றை முழுமையாக அல்லது சலுகை அடிப்படையில் தள்ளுபடி செய்யும் அரசு. முடிதிருத்தும் தொழிலாளர்கள் பிள்ளைகளின் கல்விக் கட்டணங்களை தமிழக அரசே ஏற்பதுடன் படித்து கொண்டு இருக்கும். மருத்துவர் இன மாணவ மற்றும் மாணவிகள் கல்விக் கடன்களை அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

மருத்துவர் சமுதாயத்தைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் தொடர்கிறது.

தமிழ் நாடு முழுவதும் மருத்துவ சமுதாயத்தை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. வீடு மற்றும் கடையை சூறையாடி தாக்குதல் வெறியாட்டம் போட்டவர்கள் மீது நடவடிக்கை இல்லை. தமிழ் நாடு முழுவதும் மருத்துவ சமுதாய மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்கிறது. மருத்துவர் சமூகத்தினருக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு தமிழக அரசு சட்டமன்றத்தில் தனி சட்டம் கொண்டு வர வேண்டும்.

சுதந்திர போராட்ட தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.

சுதந்திர போராட்ட தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ் அவர்களுக்கு மதுரை திருமங்கலத்தில் மணிமண்டபம் போல சென்னையில் மணிமண்டபம் வைக்க வேண்டும்,