வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி

வளர்ச்சிக்கான மருத்துவர் இனத்திற்கு அடையாளமாக, நமது "வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி" உங்களை அன்போடு அழைக்கிறோம்.

நாம் மருத்துவர் இனத்தில் நான் தான் முதன்மையானவராக இருக்க வேண்டும் என்ற நமக்குள் இருக்கும் ஆசை மற்றும் ஈகோ காரணத்தினால் மருத்துவர் சமுதாயம் தெருக்கு, தெரு பல அமைப்புகள் பிரிந்து கிடக்கிறது. மருத்துவர் இனம் அடிப்படை சுதந்திரங்கள், கெளரவம், சுயமரியாதை களை இழந்து வருவதை உணர்த்தும் சுதந்திர போராட்ட தியாகி எஸ்.எஸ். விஸ்வநாததாஸ், அவர் கண்ட கனவு மருத்துவர் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு, அரசு வேலை, கல்வி, பெண்களுக்கு பாதுகாப்புக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நாம் சிந்தித்த போது தோன்றிய வாசகம் "வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி"

"வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி" மருத்துவர் இன மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் சமுதாய முன்னேற்றத்திற்கு வளர்ந்து வரும் சவால்களை தொலைநோக்குப் பார்வையுடன் நமக்கு நாமே அதற்கான செயல் திட்டத்தை வரையறுத்து செயல்பட வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி தொண்டர்கள் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து தற்போது களப் பணியாற்றி வருகிறார்கள்.

மருத்துவர் இன மக்கள் பெரியவர்கள், தாய்மார்கள், அரசு பதவிகளில் இருப்பவர்கள், ஓய்வு பெற்றவர்கள், மாணவ - மாணவிகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நாம் மருத்துவர் இன குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியில் இணைவீர்.

மருத்துவர் இனம் அரசியலில் காலூன்ற முடியாமல் ஆதிக்க கட்சிகள் பல ஆண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பிரிந்து கிடக்கும் நாம் மருத்துவர் சமுதாயம் எல்லாம் ஓர் அணியில் திரண்டு நிற்க நமக்கு உதித்திருப்பது தான் "வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி"

"வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி" மருத்துவர் இனம் என்ற ஒரே காரணத்தினால் ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் நமது கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை. ஆகவே நமது மருத்துவர் இணையதளத்தை வலிமைப்படுத்த வேண்டும். தொண்டர்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும்.

நன்றி.

S.K.செல்வம்
நிறுவனர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர்.
வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி